நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுகிழங்கு நடவு பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் நாயக்கர்பட்டி வேப்பங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் சிறுகிழங்கு பயரிடப்பட்டு உள்ளது. சீனா பொட்டேட்டோ என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் சிறுக்கிழங்கு நல்ல மணமும், சுவையும் கொண்டது.
பெரிய அளவில் சாகுபடி செலவு தேவைப்படாமல் நல்ல வருமானம் கொடுக்கும் பயிராக இருப்பதால் விவசாயிகள் பலர் இதனை விரும்பி சாகுபடி செய்கின்றனர். மூன்று மாதங்களுக்கு முன்பு விதைகளை பயிரிட்டு அதன் மூலம் வரக்கூடிய கொடியை சிறிது நருக்கி நடவு செய்கின்றனர். கடந்த மாதம் போதிய மழையின்றி விளைச்சல் குறைவாக இருந்ததாக கூறும் விவசாயிகள் இந்த ஆண்டு பருவமழை கை கொடுத்து இருப்பதால் சிறு கிழங்கு விளைச்சல் அமோகமாக இருக்கும் என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளனர்.