ஊரடங்கும் காரணமாக வீட்டிலேயே அடைபட்டு இருப்பவர்களுக்கு வீட்டு சமையலறையில் இருக்கும் சமையலுக்கு உதவாது என ஒதுக்கிய பேபி உருளைக்கிழங்கு வைத்து செய்யக்கூடிய சுவைமிக்க உருளைக்கிழங்கு மசாலா செய்து கொடுத்து அவர்களது லாக் டவுன் நேரத்தையும் ஸ்பைசியாக மாற்றி அமையுங்கள்.
தேவையான பொருட்கள்
பேபி உருளைக்கிழங்கு
வத்தல்
ஜீரகம்
கருப்பு மிளகு தூள்
கொத்தமல்லி விதைகள்
எண்ணெய்
எலுமிச்சைச்சாறு
கொத்தமல்லி இலை
செய்முறை
- முதலில் பேபி உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும்.
- கடையொன்றில் வத்தல், சீரகம், கொத்தமல்லி விதைகள், கருப்பு மிளகு தூள் அனைத்தையும் போட்டு நன்றாக வறுத்து பொடியாக அரைத்து மசாலா கலவையை தயார் செய்து கொள்ளவும்.
- அடுத்ததாக கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு நன்றாக வறுத்து அதனுடன் வேக வைத்து எடுத்த உருளைக்கிழங்கையும் சேர்க்கவேண்டும்.
- பின்னர் அதனுடன் எடுத்து வைத்துள்ள மசாலா கலவை பொடியையும் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
- கலவை அனைத்தும் ஒன்றாக கலந்த பின்னர் எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து இறக்கிவிடவும்.
- கொத்தமல்லி இலை கொண்டு அலங்கரித்து சாதத்துடன் பரிமாறலாம்.