மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து புதிதாக வெங்காய மூட்டைகள் குவிந்துள்ளதால் டெல்லி போன்ற பெருநகரங்களில் விலை குறைய வாய்ப்புள்ளது.
சமீபத்தில் வெங்காய உற்பத்தி குறைந்ததால் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ 200 ரூபாய் வரை விற்பனையானது. வரத்தும் குறைவாக காணப்பட்டதால் விலை உயர்வு இரண்டு வாரங்களாக நீடித்தது. இந்த நிலையில் நேற்று டெல்லியில் வெங்காய வரத்து இரு மடங்காக உயர்ந்தது.
கடந்த இரண்டு மூன்று நாட்களாக வெங்காயத்தின் விலை 100 ரூபாய்க்கும் அதற்கு குறைந்தும் காணப்பட்டது. தற்பொழுது உற்பத்தி மேலும் அதிகரித்து வெங்காய மூட்டைகள் குவிந்ததால் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.