Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதுக்கு தான் நிக்கிறீங்களா….? தாய்-மகன் செய்த வேலை…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக போதை ஊசி விற்பனை செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குறிச்சி பகுதியில் சட்டவிரோதமாக சிலர் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் வெள்ளலூர் பகுதியில் வசிக்கும் சித்திக், லத்தீப் மற்றும் ரசீது என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் போதை ஊசி மற்றும் மாத்திரைகளை விற்பனை செய்ததும் காவல்துறை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து ஆத்துப்பாலம் பகுதியில் சட்டவிரோதமாக போதை ஊசி விற்பனை செய்து கொண்டிருந்த பானு மற்றும் அவரது மகன் ரியாஸ் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவ்வாறு சட்டவிரோதமாக போதை ஊசி விற்பனை செய்த குற்றத்திற்காக 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 210 போதை ஊசி மற்றும் மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |