சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய 10 டன் அளவிலான போதைப் பொருட்களை கொலம்பியாவின் தலைநகரில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.
கொலம்பியாவின் தலைநகரில் சட்டத்திற்கு புறம்பாக இடதுசாரி கிளர்ச்சியாளர்கள் போதைப்பொருள் ஆராய்ச்சிக்கூடம் நடத்தியுள்ளார்கள். இதனையடுத்து அதிகாரிகளுக்கு இடதுசாரிக் கிளர்ச்சியாளர்கள் போதைப்பொருள் ஆராய்ச்சிக்கூடம் நடத்தியது தொடர்பாக தகவல் கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் இடதுசாரி கிளர்ச்சியாளர்கள் நடத்திய போதைபொருள் ஆராய்ச்சி கூடத்தை அழித்துள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதோடு மட்டுமின்றி கொலம்பியாவின் தலைநகரில் வைத்து அமெரிக்க டாலருக்கு சுமார் 300 மில்லியன் மதிப்பில் 10 டன் அளவிலான போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.