Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! இவ்ளோ.. போதை மாத்திரைகளா…? சந்தேகத்தில் தூக்கிய அதிகாரிகள்…. அதிரடியாக நடந்த பரபரப்பு சம்பவம்….!!

தாய்லாந்திலுள்ள துறைமுகத்திலிருந்து 193 கிலோ போதை மாத்திரைகள் ஆஸ்திரேலியாவிற்கு கடத்தப்படவிருந்த நிலையில் அதனை அந்நாட்டின் சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளார்கள்.

தாய்லாந்தில் பஞ்சிங் பேக் என்னும் குத்துச்சண்டை வீரர்கள் பயிற்சியில் பயன்படுத்தும் பொருள் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்தப் பொருள்கள் தாய்லாந்திலுள்ள பாங்காக் என்னும் துறைமுகத்திலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட இருந்துள்ளது.

ஆனால் ஆஸ்திரேலியாவில் இதனுடைய தேவை இல்லாததால் சந்தேகமடைந்த தாய்லாந்து அதிகாரிகள் பஞ்சிங் பேக்கை பரிசோதனை செய்துள்ளார்கள். அந்த பரிசோதனையின் முடிவில் பஞ்சிங் பேக்கில் 225 கோடி ரூபாய் மதிப்புடைய சுமார் 193 கிலோ ஆம்பிட்டாமையின் போதை மாத்திரைகள் ஆஸ்திரேலியாவிற்கு கடத்தப்பட இருந்துள்ளது.

இதனை அறிந்த தாய்லாந்து சுங்கத்துறை அதிகாரிகள் உடனடியாக அதனை பறிமுதல் செய்துள்ளார்கள்.

Categories

Tech |