சுற்றுலா பேருந்தில் கஞ்சா கடத்திய இரட்டை சகோதரர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து நாட்டில் ஆர்கு மாகாணத்தில் எல்லை தாண்டி சென்ற சுற்றுலா பேருந்து ஒன்றை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த பேருந்தில் இருந்த இரட்டை சகோதரர்கள் சுற்றுலா செல்வது போல நடித்து கஞ்சா கடத்தி வந்துள்ளனர். இதனை அறிந்த போலீசார் அந்த சுற்றுலா பேருந்தை மடக்கி அதிலிருந்து 116 கிலோ கஞ்சாவை எடுத்துள்ளனர்.
இந்த போதை பொருளின் மதிப்பு ஒரு மில்லியன் சுவிஸ் பிராங்குகள் ஆகும். இதனை அடுத்து இந்த கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இரட்டை சகோதரர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.