போதைப்பொருள் கடத்தியவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் வசித்து வந்த நாகேந்திரன் என்பவர் தனது தொடையில் 42.72 கிராம் ஹெராயின் போதைப்பொருளை கடத்தி வந்துள்ளார். இதனால் கடந்த 2009 ஆம் ஆண்டு சிங்கப்பூர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து போதைப்பொருள் கடத்திய வழக்கில் அவருக்கு மரண தண்டனையானது இன்று நிறைவேற்றப்பட இருந்தது.
இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மரண தண்டனையானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் ஆணை பிறப்பித்துள்ளனர்.