திருச்சி மாவட்டத்தில் சத்திரம் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த பஸ் நிலையத்திற்கு அருகில் 90 காபி பார் ஒன்று உள்ளது. இதே போல் கரூர் பைபாஸ் ரோட்டில் அகிலாண்டேஸ்வரி டீ கடை ஒன்று உள்ளது. இந்த இரண்டு கடைகளிலும் புகையிலை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் பெயரில் திருச்சி மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு உணவு பாதுகாப்பு அலுவலர்களுடன் அந்த கடைகளில் சோதனை நடத்தியுள்ளார். இந்த சோதனையில் அந்த கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்துள்ளது. இதனால் அந்தக் கடைகளின் உரிமையாளருக்கு தலா ₹ 10,000 அபராதம் விதித்ததோடு இரண்டு கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர்.