போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகைகள் ராகினி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.
போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக நடிகைகள் ராகினி, சஞ்சனா கல்ராணி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இருவரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதையடுத்து பெங்களூரு சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் தங்களை ஜாமினில் விடுதலை செய்யக்கோரி பெங்களூரு போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
மேலும் இதே வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சிவப்பிரகாஷ், தன்னை போலீசார் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்குகளின் மீதான வழக்கறிஞர்களின் வாதம் நிறைவடைந்ததையடுத்து தீர்ப்பு நாளை வழங்கப்படுகிறது.