Categories
Uncategorized தேசிய செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் வழக்கு – கேரள முன்னாள் அமைச்சரின் மகன் கைது…!!

கேரள மாநிலம் முன்னாள் உள்துறை அமைச்சர் குடியேறி பாலகிருஷ்ணன் மகன் பெனிஸ் குடியேறியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.

கன்னடத் திரையுலகில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக நடிகைகள் அனேக, ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்டோரை  மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் உடன் கேரள மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் பெனிஸ் குடியேறியை தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக ஏற்கனவே கர்நாடக போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு இருந்தனர். இந்நிலையில்  சாந்தி நகரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் பெனிஸ் குடியேறி நேற்று விசாரணைக்கு ஆஜரானார். ஏற்கனவே கைது செய்யப்பட்ட முகம்மது அனுப்பிடம் 50 லட்சம் பண பரிவர்த்தனை செய்ததற்கான முக்கிய ஆதாரங்கள் கிடைத்ததால் அமலாக்கத் துறை அதிகாரிகள் பெனிஸ் குடியேறியை அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மேலும் அவரை நான்கு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கேரள தங்கம் கடத்தல் விவகாரத்தில் ஏற்கனவே நெருக்கடியில் உள்ள முதல்வர் திரு பினராய் விஜயனுக்கு தற்போது போதை பொருள் கடத்தல் வழக்கில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவரின் மகன் கைது செய்யப்பட்டது கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |