Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பணம் கேட்டதற்கு தகராறு…. போதை வாலிபர்களின் அட்டூழியம்…. கோவையில் பரபரப்பு…!!

குளிர்பானத்திற்கு காசு கேட்டதால் மதுபோதையில் வாலிபர்கள் பேக்கரி கடை ஊழியர்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பீளமேடு பகுதியில் பேக்கரி மற்றும் டாஸ்மாக் கடை அருகருகே அமைந்துள்ளது. இந்நிலையில் 5 வாலிபர்கள் டாஸ்மாக் கடையில் மது குடித்த பிறகு அருகில் இருக்கும் பேக்கரிக்கு சென்றுள்ளனர். அதன் பிறகு 5 வாலிபர்களும் குளிர்பானம் வாங்கி குடித்துள்ளனர். இந்நிலையில் பேக்கரியில் காசாளராக வேலை பார்க்கும் செல்வின் துரை என்பவர் வாலிபர்களிடம் குளிர்பானம் குடித்ததற்கு பணம் கேட்டுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த வாலிபர்கள் எங்களிடமே பணம் கேட்கிறாயா என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அங்கிருந்த பஞ்சிங் மெஷினை எடுத்து செல்வின் துரையை தாக்கியுள்ளனர்.

இதனை தட்டிக்கேட்ட ஊழியரான மணிகண்டன் என்பவரையும் போதையில் அந்த வாலிபர்கள் தாக்கியுள்ளனர். மேலும் மது போதையில் 5 பேரும் பேக்கரி கடையை அடித்து நொறுக்கியுள்ளனர். அதன்பின் அருகில் உள்ளவர்கள் படுகாயமடைந்த செல்வின் துரை மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கௌதம், இசக்கிமுத்து, தினேஷ், அருள்நந்தி, செந்தில்குமார் ஆகிய 5 பேரையும் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |