பொது இடங்களில் புகைப்பிடித்த 6 நபர்களுக்கு சுகாதாரத்துறையினர் தலா 100 ரூபாய் அபராதம் வைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொது இடம் மற்றும் பேருந்து நிலையங்களில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி உத்தரவின் படி வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் தலைமையில் சுகாதார துறையினர் தீவிர ஆய்வு செய்துள்ளனர்.
அப்போது பொது இடங்களில் புகைப் பிடித்த 6 நபர்களுக்கு தலா 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதனை அடுத்து கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகின்றதா என சோதனை செய்துள்ளனர்.