பகல் 12 மணிக்கு மேல் கடைகள் அடைக்கப் படுவதால் காலை நேரத்தில் குவிந்த பொதுமக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது .
தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு மீண்டும் வாரம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் தினமும் பகல் 12 மணிக்கு மேல் மளிகை, காய்கறி, கறி, டீ, துணி ,செல்போன் போன்ற கடைகள் திறக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தென்காசியில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டு வருகின்றது. இதனால் அரசு பகல் 12 மணிக்கு மேல் மளிகை, காய்கறி, துணி போன்ற கடைகள் திறக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இதனை பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்கிறார்களா என்பதை கண்காணிப்பதற்கு மாவட்ட ஆட்சியாளர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். அந்த உத்தரவின்படி அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பகல் 12 மணிக்கு மேல் கடைகள் அடைக்கப்படுவதால் பொதுமக்கள் அனைவரும் தங்களது தேவைக்கான பொருட்களை வாங்குவதற்காக கடைகளுக்கு காலையில் இருசக்கர வாகனங்களில் வருவதும் செல்வதுமாக இருக்கின்றனர்.
இதனையடுத்து பணிக்கு செல்பவர்கள் இருசக்கர வாகனங்களில் வருவதால் அப்பகுதியில் உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை போக்குவரத்து காவல்துறையினர் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் ஒழுங்குபடுத்தி வாகனங்களை அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பொதுமக்கள் தங்களது தேவைக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டுமென்றும் அவ்வாறு வரும்போது முன் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.