தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா அவசரகால செயல்பாட்டு மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்து ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளதால் பல அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களின் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு மீண்டும் கட்டுப்பாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியது.
இந்நிலையில் தென்காசியில் நாளுக்கு நாள் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மாவட்ட கலெக்டர் சமீரன் என்பவர் பொதுமக்களுக்கு கொரோனா அவசரகால செயல்பாட்டு மையம் ஒன்றை கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி வைத்துள்ளார். இதில் பொதுமக்களுக்கு கொரோனா நோய்த் தொற்று தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவும், தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் விதிகளை மீறி செல்லுபவர்கள் மீதான புகார்களை தெரிவிக்கவும் இந்த அவசரகால செயல்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மைய தொலைபேசி எண் 04633-290548அல்லது 1077 நோய்த்தொற்று தொடர்பான ஆலோசனைக்கான எண்04633-281100, 04633-281102, 04633-281105 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் எந்த நேரத்திலும் தேவையான ஆலோசனைகளை பெற்று கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.