சத்தீஸ்காரில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவ, மாணவிகளை ஹெலிகாப்டர் சவாரிக்கு அழைத்து செல்வது என முடிவு செய்து கடந்த மே மாதத்தில் அரசு வாக்குறுதி அளிக்கிறது. அதன்படி 12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் இன்று ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டனர். அதற்கு முன் அவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இது குறித்து மாநில மந்திரி பிரேம் சாய் சிங் தெகாம் கூறியது,10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகளை ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்வோம் என முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். இந்த திட்டம் மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கம் கொண்டது. அதன்படி வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் ஹெலிகாப்டரில் சவாரி செய்துவிட்டு திரும்பிய மாணவி ஒருவர் கூறியது, உண்மையில் நன்றாக இருந்தது ன. முதல் முறையாக நாங்கள் ஹெலிகாப்டர் சவாரி செய்தோம். பிற மாணவர்களும் நன்றாக படிப்பதற்காக ஊக்கம் அளிக்கப்படுவார்கள். எங்களது பெற்றோர் இதனால் ஆச்சிரியமடைந்தனர் என்று தெரிவித்துள்ளார்.
10वीं और 12वीं कक्षा के टॉपर बच्चों ने की हेलिकॉप्टर राइड….
सीएम @bhupeshbaghel ने घोषणा की थी कि जो भी बच्चे अच्छे अंक से पास होंगे, जो भी बच्चे टॉप करेंगे उन्हें मैं हेलिकॉप्टर में सैर करवाउँगा.#Chhattisgarh #Motivational #Students #topper #school #helicopter #bhupeshbaghel pic.twitter.com/Ma4v0rasuh— Tanmay (@SakalleyTanmay) October 8, 2022