Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“பொது விநியோக திட்டம்” அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்…. தொழிலாளர்கள் செய்த செயல்….!!

ஓசூருக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரயில் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது.

திருவாரூரில் விவசாயிகளிடம் இருந்து அறுவடை செய்த நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் பொது விநியோக திட்டத்தின் கீழ் அரிசியாக வழங்கிட அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனையடுத்து கூடுதலான நெல் மூட்டைகள் சரக்கு ரயில்கள் மூலமாக பிற மாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதனைதொடர்ந்து லாரியில் இருந்த நெல் மூட்டைகளை தொழிலாளர்கள் சரக்கு ரயில் பெட்டியில் ஏற்றினர். அதன்பின் ரயில் மூலம் 2 ஆயிரம் டன் சன்னரக நெல் திருவாரூரில் இருந்து ஓசூருக்கு அரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Categories

Tech |