பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் குறைகள் மற்றும் புகார்களை வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தியாக தெரிவிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் புகார்கள் குறித்து கலெக்டரின் குறைதீர்வு செல்போன் எண் (9498035000) என்ற வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். எனவே செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசுவதை தவிர்த்து பொதுமக்கள் தங்களின் குறைகள், புகார்களை குறுஞ்செய்தியாக தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அறிவித்துள்ளார்.