கீழாண்மறைநாட்டில் புதிய மின் கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள கீழாண்மறைநாடு கிராமத்தில் 5 மின்கம்பங்கள் பழுதடைந்து கீழே விழும் அபாய நிலையில் இருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி தலைவர் பொன்னுத்தாய் சீனிவாசனிடம் புகார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து அவர் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின்படி ஆலங்குளம் மின் வாரியத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பழுதடைந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.