பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்திலுள்ள குடியாத்தத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100.68 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் விலை 94.66 ரூபாய்க்கும் இருந்தது. ஆனால் தற்பொது பெட்ரோல் விலை சற்று உயர்ந்து 100.99 ரூபாய்க்கும், டீசல் 94.90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.