Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஊரக வேலை உறுதித் திட்டம்” பொதுமக்களின் சாலை மறியல்…. சேலத்தில் பரபரப்பு….!!

ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணி கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள பொட்டிபுரம் ஊராட்சியிலும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த திட்டத்தில் தற்போது பண்ணை குட்டை அமைத்தல், மண் மற்றும் கற்களால் கரை அமைக்கும் பணி, மழைநீர் சேகரிப்பு குட்டை உருவாக்குதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களாக பொட்டிபுரம் ஊராட்சியில் ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஒரு பகுதி மக்களுக்கு மட்டும் பணி வழங்கவில்லை என அப்பகுதியை சேர்ந்தவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பணி கிடைக்காத பெண்கள் மற்றும் பொதுமக்கள் வேலை வழங்கக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணி மற்றும் செயலாளர் தன்ராஜ் ஆகியோரிடம் முறையிட்டனர். ஆனால் அவர்கள் பணி ஒதுக்கீடு செய்து தரவில்லை என தெரிகிறது. இதனால் கோபமடைந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அதன்பின் ஓமலூர்-தின்னப்பட்டி ரோட்டில் பொட்டிபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது காவல்துறையினர் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்த பின் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |