Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 23, 631…. ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள்…. கலெக்டரின் ஆய்வு….!!

500 முகாம்களில் கலெக்டர் ஆய்வு செய்ததில் 23,637 நபர்களுக்கு தடுப்பூசி போட்டி இருப்பதாக தெரியவந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் 500 வாக்குச்சாவடி மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாம் காலை 7 மணி முதல் தொடங்கியதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில் இம்மாவட்டத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கு இருந்த மருத்துவர்களிடம் தடுப்பூசிகளின் இருப்பு குறித்து கேட்டறிந்துள்ளார். அதன்பின் ரெட்டியூர் உள்பட 5 பகுதிகளிலும் கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று முகாமை ஆய்வு செய்துள்ளார்.

பின்னர் அங்கிருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் தடுப்பூசி இருப்பு எவ்வளவு இருக்கிறது குறித்தும், எத்தனை நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது குறித்தும் கேட்டு அறிந்துள்ளார். இதனை அடுத்து பொதுமக்களின் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போட வேண்டும் எனவும், முகாமில் இருப்பு இருக்கின்ற தடுப்பூசிகளை 100% பொதுமக்களுக்கு போட வேண்டும் எனவும் அவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து இந்த முகாம்களின் மூலமாக 23, 631 நபர்களுக்கு தடுப்பூசி போடப்படிருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |