Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…. சிறப்பாக நடைபெற்ற விழா…. ஆட்சியரின் தகவல்….!!

உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் பரிசுகளை வழங்கியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நுகர்வோர் பாதுகாப்பு துறை மற்றும் உணவு வழங்கல் துறை சார்பாக உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி பல போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி உள்ளார். அப்போது டாக்டர் ஆர்த்தி கூறியதாவது, தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழாவும் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவும் சேர்ந்து கொண்டாடப்படுகின்றது. இந்த விழா நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-ல் வழங்கப்பட்ட நுகர்வோருக்கான உரிமைகள் குறித்த விழிப்புணர்வை தூண்டுவதற்காக கொண்டாடப்படுகின்றது.

இவை 15.03.1983 முதல் உலகம் முழுவதும் உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்பின் ஒவ்வொரு வருடம் மார்ச் மாதம் 15-ஆம் தேதி உலக நுகர்வோர் உரிமைகள் தினம் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் வணிக சந்தையில் விளங்கும் பொருட்களின் தரம், நியாயமான விலை, உற்பத்தியாளர் தொடர்பான விவரம், பாதுகாப்பு, விதிமுறைகள் மற்றும் சேவைகள் போன்றவை குறித்து நுகர்வோர் அறிந்து அதைப் பயன்படுத்துவது மிக இன்றியமையாதது ஆகும்.

இதனையடுத்து இது தொடர்பான விழிப்புணர்வை உருவாக்க கல்லூரி மற்றும் பள்ளி கருத்தரங்கு கட்டுரை போட்டி மற்றும் கவிதை போட்டி நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் பொதுமக்களிடையே இது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும், நுகர்வோர் குறைதீர் மன்றம் மற்றும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஆகியவை இந்த சட்டத்தை செயல்படுத்தும் கருவியாக அமைந்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |