பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்காக வேட்பாளர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் அரிகிருஷ்ணன் என்பவரின் வீட்டில் சந்தேகத்தின் பேரில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 8 துண்டுகள், 187 பூட்டு மற்றும் சாவிகள், 14 மஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள் மற்றும் 14 விநாயகர் சிற்பம் ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்த காவல்துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர்.
அதன்பின் விசாரணை நடத்தியதில் வேட்பாளர்களுக்கு வழங்குவதற்காக பொருட்களை பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை காவல்நிலையத்தில் பறக்கும் படையினர் ஒப்படைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.