Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

‘பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கோங்க’ ….! எம்.எல்.ஏ அறிவுறுத்தல் …!!!

தமிழகத்தில் தளர்வில்லா ஊரடங்கினால் ,திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக   தொற்று பாதிப்பு  எண்ணிக்கை குறைந்துள்ளதாக எம்.எல்.ஏ.வி.ஜி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்துள்ள , திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை, புதுமாவிலங்கை ஊராட்சி அகரம் கிராமம், சேலை கிராமம் ஆகிய இடங்களில் கொரோனா  வைரஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்கள்  நடந்தது . இந்த முகாமை திருவள்ளூர் மாவட்ட எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் ,நேற்று காலையில் சென்று பார்வையிட்டார். முகாமில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம், தடுப்பூசி போட வரும் மக்களுக்கு தடுப்பூசியால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தடுப்பூசி செலுத்திய பின் எடுத்துக்கொள்ள வேண்டிய  மருந்துகளின்  விவரம் குறித்து எடுத்துக் கூற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 7 ம் தேதி வரை தளர்வில்லா  ஊரடங்கு நீடித்து உள்ளார். திருவள்ளூரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா  தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொண்டால் கொரோனா  வைரஸ் தொற்றிலிருந்து, நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று அவர் அறிவுறுத்தினார்.

Categories

Tech |