Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு வேணும்” கோபத்தில் கொந்தளித்த பொதுமக்கள்…. காவல்துறையினரின் பேச்சுவார்த்தை….!!

குடிநீர் விநியோகிக்க வேண்டி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் இருக்கும் கித்வாய் தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 5 நாட்களுக்கு மேலாக அப்பகுதியில் குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த பொது மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அப்போது குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |