Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இதை இணைக்க வேண்டாம்…. பொதுமக்களின் கோரிக்கை…. கலெக்டருக்கு மனு….!!

பொது மக்களின் சார்பாக ஆர்.வி. ரஞ்சித்குமார் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்காமல் கிராம ஊராட்சிகள் அப்படியே செயல்பட அனுமதி வேண்டி 200-க்கும் அதிகமான  மக்கள் அலுவலகத்தின் முன்பாக கூடியுள்ளனர்‌. இந்நிலையில் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினரான ஆர்.வி. ரஞ்சித்குமார் தலைமையில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கியுள்ளனர். அதில் இம்மாவட்டத்தில் இருக்கும் கிராமங்களை புதிதாக உருவாக்கப்படும் மாநகராட்சியுடன் இணைக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனால் 2,600 நபர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி செய்து வருவது பாதிப்பு ஏற்படும் என பொதுமக்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து ஊராட்சியை நகராட்சியுடன் இணைத்தால் அனைத்து குடும்பங்களும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும், பொதுமக்களின் நலன் கருதி ஊராட்சி மாநகராட்சியுடன் இணைக்காமல் தற்போது இருக்கின்ற கிராம ஊராட்சியாக செயல்பட அனுமதி தருமாறு கலெக்டரிடம் அளித்த மனுவில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |