நியாய விலை கடையில் தரமற்ற அரிசி வழங்குதலை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பழனிபுரத்தில் நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு அரிசி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரிசி பழுப்பு நிறத்தில் தரமற்றதாக இருந்ததால் பொதுமக்கள் நியாய விலை கடையை முற்றுகையிட்டுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அப்போது பொதுமக்கள் அதிகாரிகளிடம் தரமற்ற அரிசியை வழங்கினால் நாங்கள் எப்படி சாப்பிட முடியும் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் தரமான அரிசி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர். அதன்பின் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.