Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பராமரிப்பு இல்லாத பேருந்துகள்…. குடை பிடித்தவாறு பயணம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

பேருந்துகளில் பொதுமக்கள் குடை பிடித்தவாறு பயணம் செய்கின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகள் மோசமான நிலையில் இருக்கின்றன. தற்போது அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஏனெனில் பேருந்து மேற்கூரை வழியாக மழைநீர் வடிகின்றது. இந்நிலையில் பேருந்துக்குள் மழைநீர் வடிவதால் பொதுமக்கள் குடைகளை பிடித்தவாறு பயணம் செய்கின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறும் போது ஊரடங்கு நேரத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பேருந்தை பராமரித்திருக்கலாம். எனவே இனியாவது பழுதடைந்த பேருந்துகளை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |