கிராம மக்கள் திடீர் என நடத்திய தர்ணா போராட்டத்தினால் கலெக்டர் அலுவலகம் முன்பாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் கலெக்டர் அலுவலகம் முன்பாக பொதுமக்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் கிராமத்தில் வாக்காளர் பட்டியலில் பல விதமான குளறுபடிகள் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அதன்பின் வாக்காளர் பட்டியலில் இறந்துபோனவர்களின் பெயர்கள் நீக்கப்படாமலும், ஒரு வார்டில் வசிப்பவர்கள் பெயரை சம்பந்தமே இல்லாமல் இன்னொரு வார்டில் சேர்க்கப்பட்டிருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
அதனால் அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்காளர் பட்டியலில் இருக்கும் குளறுபடிகளை நீக்கி ஊராட்சி வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்து பின் வெளியிட வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டர் ஸ்ரீதரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிராம மக்கள் கலைந்து சென்றுள்ளனர்.