குடிநீர் வசதி இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மருங்கூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முறையான குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அருகாமையில் இருக்கும் விவசாய நிலங்களுக்குச் சென்று குடிநீர் பிடித்து வந்து பயன்படுத்தி வந்தனர். இதுபற்றி பலமுறை புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வந்தனர்.
இதனால் கோபமடைந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது குடிநீர் பிரச்சினையை தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் இதனால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.