பொதுமக்கள் அனைவரும் குப்பை கிடங்கை அமைக்க கூடாது என சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள நகராட்சியை மாநகராட்சியுடன் தரம் உயர்த்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் விவசாய நெல் பண்ணை நிலத்தில் குப்பை கிடங்கு அமைப்பதற்காக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வந்துள்ளனர். இது பற்றி தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் கிடங்கை அமைப்பதற்கு தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். அதன்பின் அவர்கள் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டால் மண்ணின் தன்மை மாறும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால் விவசாயிகள் கடுமையான முறையில் பாதிக்கப்படுவார்கள் என பொதுமக்கள் கூறியுள்ளனர். இவற்றில் 500-க்கும் அதிகமான பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி தகவலறிந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் இதை அமைப்பதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டாட்சியர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதில் குப்பைக்கிடங்கு அமைக்காமல் இருபதற்கும், தங்களின் கோரிக்கை படி இலவச மனைப்பட்டா வழங்குவதற்கும் உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக சமாதானக் கூட்டம் நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.