Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு உடனடியாக வேண்டும்…. விவசாயி தீக்குளிக்க முயற்சி…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

கூட்டுறவு சங்கத்தின் முன்பாக பொதுமக்கள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கடம்பூர் கிராமத்தில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைந்திருக்கிறது. இதில் கடம்பூர், மே.புதூர் உள்ளிட்ட பல கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கணக்கு வைத்து பணம் பரிவர்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கணக்கு வைத்திருக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அடகு வைத்த நகைகளை திருப்பும் போது ஊழியர்கள் நகைகளை முறையாக வழங்குவது இல்லை என கூறப்படுகின்றது.

இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் 1௦௦-க்கும் அதிகமானோர் கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு நடக்கிறது கூறி திடீரென முற்றுகையிட்டுள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தாங்கள் அடகு வைத்த நகைகளை திருப்பித் தரக் கோரி கண்டன கோஷம் எழுப்பி சங்கம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விவசாயி ஒருவர் தான் அடகு வைத்த நகையை உடனே திருப்பி தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் எனக் கூறி தனது உடலின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.

இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் கேனை வாங்கி கொண்டு அவர் மீது தண்ணீர் ஊற்றியுள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் முறைகேடு குறித்து கூட்டுறவு சரக கள அலுவலர் கமலகண்ணன் தலைமையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்துள்ளார். மேலும் இதன் காரணத்தினால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |