சதித்திட்டம் தீட்டிய கும்பலை சேர்ந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள அண்ணாமலை நகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மேம்பாலத்திற்கு கீழே இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரி அருகாமையில் சிலர் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அதன்பின் அவர்கள் காவல்துறையினரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்ததால் சந்தேகத்தின் பேரில் அவர்களை விரட்டிச் சென்ற நிலையில் இரண்டு பேர் பிடிபட்டுள்ளனர். பின்னர் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் ஜெயசீலன் மற்றும் கதிரவன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து தப்பிச் சென்றவர்கள் நெல்சன், மூர்த்தி மற்றும் சரத்குமார் என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதற்கு பிறகு இவர்கள் ஐந்து பேரும் இணைந்து பொதுமக்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட சதித்திட்டம் தீட்டியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த காரை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தப்பி சென்று தலைமறைவாக இருக்கும் 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.