பொதுமக்கள் சிலரை அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வாலிபர் ஒருவர் நடந்து சென்ற பொதுமக்கள் சிலரிடம் அரிவாளைக் காட்டி கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி கொண்டு இருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் உடனடியாக சென்று அந்த வாலிபரை பிடித்து நடத்திய விசாரணையில் அவர் வீரவாஞ்சி பகுதியில் வசிக்கும் மாரிச் செல்வம் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக மாரிச் செல்வனை கைது செய்தபோது அவரின் மீது ஏற்கனவே அடிதடி, கொலைமிரட்டல் போன்ற ஐந்து வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் காவல்துறையினர் மாரிச்செல்வதை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.