Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பொதுமக்களின் விநியோகத்திற்காக… மொத்தம் 2,000 டன்… அதிகாரிகளின் தகவல்…!!

திருவாரூரில் இருக்கும் அரசு கொள்முதல் நிலையத்தில் இருந்து 2,000 டன் அரிசி மூட்டைகளை பொது விநியோகத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் ஏராளமான விவசாயி குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது நிலத்தில் பயிரிட்டு அறுவடை செய்த நெல் மணிகளை அப்பகுதியில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகின்றனர். அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல்மணிகளை அந்த நிலையத்தில் பணிபுரியும் தொழிலாளிகள் காய வைத்து அதனை மூட்டையாக பிடித்து பாதுகாப்பாக பத்திரப்படுத்தி வைப்பார்கள். இதனையடுத்து அதிகாரிகள் நெல் மூட்டைகளை சோதனை செய்து அதனை மில்லிருக்கு கொண்டு சென்று அரிசி மூட்டையாக பிரித்து வைப்பார்கள்.

இதனையடுத்து அதிகாரிகள் இந்த அரிசியை பொது விநியோக திட்டத்தில்  பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பல்வேறு மாவட்டங்களுக்கு ரயில் மூலம் அனுப்பி வைப்பர். இந்நிலையில் அதிகாரிகள் திருவாரூரில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள அரிசி மூட்டைகளை லாரிகளில் ஏற்றி கொண்டு ரயில் நிலையத்திற்கு சென்றனர். இதனையடுத்து தொழிலாளர்கள் 2,000 டன் அரிசி மூட்டைகளை சரக்கு ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர்.  இந்த அரிசி மூட்டைகள் வேலூரில் உள்ள பொதுமக்களுக்கு பொது விநியோகத்திற்காக அனுப்பப்பட்டுள்ளது என அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர் .

Categories

Tech |