Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

உங்களுக்கு எப்படி தெரிந்தது…. சிறப்பாக நடைபெற்ற முகாம்கள்…. அதிகாரிகளின் ஆய்வு….!!

பள்ளியில் வைத்து நடைபெற்ற தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளது. இந்த முகாம்கள் 455 மையங்களில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமை கண்காணிப்பு அலுவலரும், மீன்வளத் துறை கூடுதல் ஆணையர் சஜ்யன்சிங் ஆர்.சவான் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.

அதன்பின் தடுப்பூசி போடுவதற்கு வந்த பொதுமக்களிடம் கண்காணிப்பு அலுவலர் தங்களுக்கு முகாம் குறித்த தகவல் எப்படி கிடைத்தது என கேட்டு அறிந்துள்ளனர். இதனை தொடர்ந்து செவிலியரிடமும் மற்றும் மருத்துவர்களிடமும் எத்தனை நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது எனவும் மற்றும் எவ்வளவு தடுப்பூசி இருப்பு இருக்கிறது எனவும் அதிகாரிகள் கேட்டு அறிந்துள்ளனர்.

Categories

Tech |