4,50,000 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு இருப்பதாக கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் இருக்கும் 500 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இவற்றில் விவசாய பொதுமக்கள், அறக்கட்டளையை சேர்ந்தவர்கள், வணிக நிறுவனங்களை சேர்ந்தவர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டு சென்றுள்ளனர்.
இதனை அடுத்து இம்மாவட்டத்தில் 4, 50,000 நபர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இதில் 100% கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் செலுத்தி கொண்டதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். பின்னர் இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் தவறாமல் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார்.