Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“பாதுகாப்பாக கொண்டாட வேண்டும்” சிறப்பாக நடைபெற்ற கூட்டம்…. ஆட்சியரின் உத்தரவு….!!

பொதுமக்களுக்கு பண்டிகைகளை பாதுகாப்பான முறையில் கொண்டாட விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு பற்றி வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் கூட்டத்தில் இந்த மாதத்தில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் மற்றும் சாலை விபத்துக்கள் பற்றிய விவரங்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் கேட்டறிந்துள்ளார்.

இதில் இனி வரும் காலங்களில் குற்ற சம்பவங்களை தடுப்பது சம்பந்தமாக நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் பொங்கல் மற்றும் புத்தாண்டு பண்டிகை ஆகிய சமயத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அவர்  உத்தரவிட்டுள்ளார்.

பின்னர் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பண்டிகைகளை பாதுகாப்புடன் கொண்டாட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல் துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதனை அடுத்து கடந்த மாதத்தை விட இந்த மாதம் சாலை விபத்துக்கள் குறைந்திருப்பதாகவும், இதே போல் வரும் காலங்களில் சாலை விபத்துகள் நிகழாமல் இருக்க சாலைகளில் தேவையான தடுப்புகள், விபத்து எச்சரிக்கை பலகைகள், தற்காலிக வேகத்தடைகள் மற்றும் விளக்குகளை அமைத்திட காவல்துறை அலுவலரிடம் கலெக்டர் கூறியுள்ளார்.

Categories

Tech |