Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சிறந்த மாவட்டம் ஆகனும்…. நீங்கள் தான் ஒத்துழைப்பு தரனும்…. போலீஸ் சூப்பிரண்டின் வேண்டுகோள்….!!

மாவட்டத்தில் குற்றங்களை தடுப்பதற்காக காவல்துறையினரும், பொதுமக்களும் ஒத்துழைக்க தர வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஸ்ரீ நாதா விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சுகுணா சிங் மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து பதவியேற்றுக் கொண்ட சுகுணா சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் இன்னும் முழுமையாக செயல்படுவதற்கு தேவையானவற்றை கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் உங்கள் நண்பன் என்ற வாசகத்தோடு இருக்காமல் பொதுமக்களுக்கு உண்மையாக இருக்கும் வகையில் காவல்துறை செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு பொதுமக்களும், காவல்துறையினரும் முழு ஒத்துழைப்பு அளித்தால்தான் இந்த மாவட்டத்தில் கட்டப்பஞ்சாயத்து, மணல் திருட்டு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, சாராயம் போன்ற குற்றங்களை தடுக்க முடியும் என்று சுகுணா சிங் கூறியுள்ளார். இவ்வாறு குற்றங்கள் நடைபெறாத வகையில் பொதுமக்கள் இணைந்து இந்த புதிய மாவட்டம் சிறப்பாக வருவதற்கு எனது முயற்சி அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே பொதுமக்கள் தங்கள் புகார் குறித்து காவல் நிலையத்தில் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் எந்த நேரம் வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம் என்று சுகுணா சிங் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |