உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அலுவலகத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர்.
உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்களில் வருகின்ற அக்டோபர் 6-ஆம் தேதி முதல் 9- தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்தலை நடத்த விதிமுறைகளும் உடனடியாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்பின் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பஞ்சாயத்துகளுக்கு அருகாமையில் 5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகள் அனைத்தையும் முடிவடையும் வரையில் அமலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜீனர் ரோட்டில் அமைந்திருக்கும் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தை திடீரென பொதுப்பணித்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர்.