Categories
மாநில செய்திகள்

“பொதுப்போக்குவரத்து எப்போது தொடங்கும் ….?”

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு முன்பாக பேருந்து சேவை தொடங்க வாய்ப்பு இல்லை என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் கடந்த ஜூன் 24-ஆம் தேதி முதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 25-ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு ஜூன் மாதத்தில் பொதுப்போக்குவரத்துக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டது. என்றாலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. ஆனால் பிற மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா தொற்றியின் வேகம் அதிகரித்ததால் ஜூன் 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

சென்னையில் கொரோனா தொற்று பரவல் சற்று குறைவாக இருந்தாலும் கோவை, தேனி, கடலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நாள்தோறும் 34 சதவீதம் பேருக்கு புதிதாக தொற்று ஏற்படுகிறது. இதனால் ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு முன்பாக பேருந்து சேவைகளை தொடங்க அனுமதி அளிக்கப்படமாட்டாது என்பது உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று பரவல் வேகம் அதிகரித்து இருப்பதால் பேருந்து சேவையை தொடங்குவதில் தமிழக அரசு அவசரம் காட்டாது என்று உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |