Categories
சினிமா

“பொதுத்தேர்வில் இவ்வளவு தான் எடுத்தேன்” விளையாட்டு இன்னும் தொடங்கவில்லை – நம்பிக்கையூட்டிய மாதவன்

நடிகர் மாதவன் பள்ளி தேர்வில் தான் எடுத்த மதிப்பெண்களை டுவிட்டரில் பதிவிட்டு மாணவர்களுக்கு நம்பிக்கையை கூறியுள்ளார்.

நடிகர் மாதவனின் டுவிட்டர் பதிவானது மாணவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் தன்னம்பிக்கையை அளித்திருக்கின்றது. இரு நாட்களுக்கு முன் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் குறைவான மதிப்பெண் எடுத்த காரணத்தினால் பல மாணவர்கள் விபரீத முடிவுகளை மேற்கொண்ட செய்தி வெளியாகியது. இந்நிலையில் நடிகர் மாதவன் இதுதொடர்பாக தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் பள்ளியின் தேர்வு முடிவினை பெற்றுள்ள அனைவருக்கும், அவர்களை ஊக்கப்படுத்தியவர்களுக்கும் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

மேலும் நான் பள்ளி தேர்வில் 58 சதவீத மதிப்பெண்கள் மட்டுமே பெற்றேன் என்று குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு கூறி தன்னம்பிக்கை அளித்துள்ளார். எந்த வகுப்பு என்பதனை அதில் குறிப்பிடவில்லை. அதனைத்தொடர்ந்து ‘இனிய நண்பர்களே விளையாட்டு இன்னும் தொடங்கவில்லை’ என்ற கருத்தை டுவிட்டரில் மாதவன் பதிவிட்டுள்ளார். இப்பதிவானது தற்போது உள்ள மாணவர்களின் மனநிலையை மாற்றி அவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்து வருகிறது.

Categories

Tech |