Categories
கிரிக்கெட் விளையாட்டு

போட்டிக்கு முன்பாக இந்திய அணி வீரர்கள் ….. தனிமைப்படுத்தப்படுவார்கள் – ஐசிசி தகவல் …!!!

இங்கிலாந்தில் நடைபெற உள்ள ,உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பாக, இந்திய அணி வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான , உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து நடைபெறுகிறது. இந்த போட்டி வருகின்ற ஜூன் 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை சவுத்தம்டன் நகரில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும், இந்திய வீரர்கள் அனைவரும் மும்பையில் உள்ள  ஹோட்டலில், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வருகிற  2 ம் தேதி இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலம் இங்கிலாந்துக்கு புறப்படுகிறது. இங்கிலாந்திற்கு புறப்படும் முன்பாக வீரர்கள் அனைவருக்கும் கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று  இல்லை என்று உறுதி செய்யப்பட்ட சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.

இங்கிலாந்து சென்றதும் வீரர்கள் அனைவரும் , ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு  மீண்டும் ஒருமுறை கொரோனா  பரிசோதனை செய்த பிறகு தனிமைப்படுத்தப்பட உள்ளன. இதுகுறித்து ஐசிசி நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்துதலில்  இருக்கும்போது ,முறையாக  பரிசோதனை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எத்தனை நாட்கள்  வீரர்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்’, என்ற விவரத்தை ஐசிசி குறிப்பிடவில்லை.

Categories

Tech |