வீட்டிலிருந்த 7 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கம்பர் பாளையம் கிராமத்தில் முரளி என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டில் இரவு நேரத்தில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது பின்பக்க கதவு திறந்து பீரோவில் வைத்திருந்த 7 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது முரளிக்கு தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த முரளி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.