நாமக்கல் மாவட்டத்தில் பெற்றோர் திட்டியதால் இளம்பெண் கொதிக்கும் எண்ணையை ஊற்றி தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கோனூர்கந்தம்பாளையத்தில் மனோகரன் மற்றும் அவரது மனைவி சாந்தி வசித்து வந்துள்ளனர். இவர்கள் அப்பகுதியில் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு காவியா(19) என்ற பெண் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு ஆன்லைன் மூலம் படித்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 12ஆம் தேதி காவியாவை அவரது பெற்றோர் வீட்டு வேலை செய்யுமாறு கூறிவிட்டு வேலைக்கு சென்றுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து காவிய வீட்டு வேலை மற்றும் சமையல் செய்யாமல் இருந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் சமையலறையில் இருந்த கொதிக்கும் எண்ணையை அவர் மீது ஊற்றிக்கொண்டுள்ளார். இதனை பார்த்து பதறிய பெற்றோர் உடனடியாக காவியாவை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி காவியா உயிரிழந்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து பரமத்திவேலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.