Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பெட்ரோல் ஊற்றி தீ… 9ஆம் வகுப்பு மகனின் விபரீத முடிவு….  தற்கொலையால் பரபரப்பான திருவாரூர் ..!!

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே 9ஆம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பூந்தோட்டம் திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு படை காவலாளராக பணியாற்றி வருகிறார். இவர் மகன் சஞ்சய்  வயது 15. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், பள்ளியில் நன்றாக படிக்க வேண்டும் என சஞ்சய்க்கு எழுத்து பயிற்சி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சஞ்சய் வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் என பெற்றோர்களும் கூறியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சஞ்சய்  நேற்று காலை வீட்டின் மாடிக்கு நடை பயிற்சிக்காக செல்வதாக  கூறி  தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்திக் கொண்டுள்ளார். அப்போது அவர் பெற்றோர்கள் வந்து மகனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் சம்பவம் குறித்து பேரளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |