இந்தியாவில் 12 மாநிலங்களில் கனமழைக்கு அடுத்த நான்கு நாட்களில் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சில மாநிலங்களில் தற்போது பரவலாக கனமழை முதல் மிதமான மற்றும் லேசான மழை பெய்து வருகிறது. அவ்வப்போது இந்த மழையானது வெள்ள பாதிப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. இதனால் பல பகுதிகள் சேதமடைந்து வருகின்றன. ஆனால் இந்த பருவமழை விவசாயத்திற்கு மிகவும் பயனளிப்பதாக இருக்கிறது. இந்நிலையில் இந்திய வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை மழை குறித்து வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், அடுத்த 4 நாட்களில் நாட்டில் 12 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது.
அதாவது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களாவன, அஸ்ஸாம், ஆந்திரம், ஒடிசா, தெலுங்கானா, ராஜஸ்தான், குஜராத், பீகார், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், கேரளம் , கோவா போன்ற 12 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஆந்திர மாநிலத்தின் கடலோரப் பகுதிகள், தெலுங்கானா, மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் மாநிலங்களிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.