உலக வங்கியானது, பாகிஸ்தானில் ஏழ்மை விகிதம் 2020 ஆம் வருடத்தில் 5 சதவீதத்தை தாண்டியுள்ளதாக கூறியுள்ளது.
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள ஏழ்மை நிலை குறித்து வெளியிடப்பட்ட தகவலில் சுமார் 20 லட்சம் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கிறார்கள். மேலும் கடந்த 2020 முதல் 2021 ஆம் வருடம் ஏழ்மை நிலை 39.3% ஆக இருக்கிறது.
மேலும் வரும் 2021-2022 வருடங்களிலும் 39.2% என்ற விகிதத்தில் இருக்கும் என்றும் 2023 ஆம் வருடத்தில் 37.9% குறைந்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அங்கு 40% வீடுகள் உணவு பாதுகாப்பு இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கி ஏழ்மையின் விகிதம் அதிகரிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2018-2019 வருடத்திற்கான ஏழ்மை நிலை அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி ஏழ்மை விகிதமானது கடந்த 2015-2016ம் வருடத்தில் 24.3% இருந்திருக்கிறது.
அதன் பின்பு 21.9% என்று குறைந்திருக்கிறது.