திருச்செந்தூர் ,ஆறுமுகநேரி ஆத்தூரில் 4-ம் தேதி மின்தடை.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட ஆத்தூர், ஆறுமுகேனரி, குரும்பூர், காயல்பட்டிணம் மற்றும் திருச்செந்தூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக வருகின்ற 4ஆம் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புன்னக்காயல், ஆத்தூர், ஆறுமுகேனரி, பேயன்விளை, கயல்பட்டணம், வீரபாண்டியபட்டணம், அடைக்கலாபுரம், தாளவாய்புரம், திருச்செந்தூர், சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூர், அம்மன்புரம், நல்லூர், பூச்சிக்காடு, கானம்கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கபுரம், குட்டித்தோட்டம், குரங்கணி, தேமான்குளம், திருக்களுர் ஆகிய பகுதிகளில் வரும் சனிக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று திருச்செந்தூர் மின்வாரிய விநியோக பிரிவு பொறியாளர் பொன் கருப்பசாமி அறிவித்துள்ளார்.